இந்திய ரயில்வே : ஒடிஷா விபத்து

170 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட துறை. இந்தியாவில் மக்களுக்கு அறிமுகமான முதல் அறிவியியல் கண்டுபிடிப்பு. பெரும்பான்மையான இந்தியர்கள் மின் விளக்கைப் பார்ப்பதற்கு முன்பே இரயில் வண்டியைப் பார்த்தவர்கள். இந்த 170 ஆண்டுகால தொடர்ச்சியில் அதே வயதுள்ள மற்றத் துறைகள் 10 மடங்கு […]

கோகுல்ராஜ் கொலைவழக்கு

இந்த நாட்டின் அத்தனை சீர்கேடுகளுக்கும் தாமதமாக கிடைக்கும் நீதிதான் காரணம் என்பது எனது நம்பிக்கை. ஆனால் இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதி கிடைத்து அது உறுதி செய்யப்பட முழுமையாக 8 ஆண்டுகள் ஆனாலும் இந்த வழக்கில் எனக்கு அந்தக் குறை […]

தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் எதிர்காலம்

உலகப் போர்களுக்குப் பிறகு சாம்ராஜ்யங்கள் சரிந்து பல புதிய நாடுகள் உருவாகின. இனம், மொழி, மதம் என பல அடிப்படைகளில் நாடுகள் பிரிந்தன. போருக்குப் பிறகான வறுமை, வேலைவாய்ப்பின்மை, பசி கொடுமை எனும் சூழலில் உலக மானுடர்கள் எல்லோருக்கும் எல்லாமும் என […]

ராயல் சல்யூட்

பாரதி மணி என்றொரு சுவாரஸ்யமான தமிழர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் எனும் செய்தியை பெரும்பான்மைத் தமிழர்கள் அறியாமலேயே இந்தக் காலத்தேர் உருண்டு போகிறது. ஒருவேளை தமிழ்த் திரைப்படங்களில் முதலமைச்சராக (பாபா) வருவாரே! அவர்தான் என்றால் கூடுதலாக மேலும் சிலர் அறியக் கூடும். […]

நாகரீக சிவில் சமூகம்

நாகரீக சிவில் சமூகத்தில் மரண தண்டனை கூடவே கூடாது!முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.ஒரே ஒரு சந்தேகம்தான்.அப்படியானல் கொடும் குற்ற செயல்கள் புரியும் குற்றவாளிகளை என்ன செய்வது?மன்னிப்போம்! மறப்போம்! அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுவோம் என்று மகாத்மா சொன்னதைப்போல செய்து விடலாமா?அத்தனைப் பெருந்தன்மையும், ஞானமும் இருக்கும் […]

பேரம்

அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் அலுவலகத்தில், அட்வகேட் வெங்கடேஸ்வரனைப் பார்க்க, அவரது அறை முன் எப்படியும் பத்து பேருக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தனர். அதே அலுவலகத்தில் பங்குதாரர்களாக இருக்கும் இன்னும் பிற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு முன்னர் வெறும் காலி நாற்காலிகள் மட்டும். […]

தாமிரா

சில ஆண்டுகளுக்கு முன் எனது ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ புத்தகத்துக்கு ஒரு நூல் விமர்சனக் கூட்டம் நெல்லை ஜானகிராம் ஹோட்டலில் நடைபெற்றது. பவாவும், ஷைலஜாவும் (பதிப்பாளர் எனும் முறையில்) ஒருங்கிணைத்த நிகழ்வு என்பதால் அவர்கள் நட்பின்பாற்பட்டு நெல்லையின் பெருமைமிகு எழுத்தாளர்கள் அனைவருமே வந்து, […]

புகழஞ்சலி

ஈரோடு டாக்டர் ஜீவா நேற்று முன்தினம் மறைந்து விட்டார். இந்தச் செய்தி அளித்த மனச்சோர்வு கடுமையானது. ஜெயமோகனின் ‘அறம்’ புத்தக வெளியீட்டுக்கு அவர்தான் தலைமை. ஈரோட்டில் நடைபெற்ற அந்த விழாவில் நான் அந்தத் தொகுப்பில் உள்ள ‘வணங்கான்’ கதையைப் பற்றி பேசினேன். […]

கருப்பு கருணா

கருணாவை போய் பார்த்தேன். குளிர்ப்பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக அவரது அருகில் இருக்கும் செங்கொடி இம்முறை அவரது மேலே போர்த்தப்பட்டிருந்தது. அதே களையான முகம். வாயில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலை மட்டுமே அந்நியமாக இருந்தது. சிறிது நேரம் உற்றுப் பார்த்தேன். போன கூட்டத்துக்கு […]

பவா எனும் பெருங்கனவுக்காரன்

ஒரு நாள் பவா வீட்டுத் தெருமுனையில் பவாவுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு மூன்றுச் சக்கர வண்டியில் காய்கறிகளை வைத்துக் கொண்டு ஒரு அம்மா விற்றுக் கொண்டு வந்தார். கருணா! அந்தக்கா பேரு கஸ்தூரி. காய்கறி விற்கிறாங்களே! அவர்களிடம் எடை […]