புல்லின் பெருமிதம்

புல்லின் பெருமிதம்

மாசறு நிலையோ;அன்பின் பெருவிரிவில்வேர் கொண்டுள்ள மாண்போ;

சூர்யனைத் தன் தலையில்
தாங்கியமையால்
சுடரும் பேரறிவோ;
இனி அடையப் போவது
ஏதொன்றுமிலாத
உயர் செல்வ நிறைவோ;
அருளானந்தப் பெருநிலை ஆக்கமோ;
புன்மையாம் வேகத்
தடையாகி நின்ற பெருவியப்போ
இவ் வைகறைப் பொழுதில்
புத்துயிர்ப்பு கொண்டு நிற்கும்
இப்புல்லின் பெருமிதம்?
தேவதேவன்.

One thought on “புல்லின் பெருமிதம்

 1. சூரியனை பார்த்து மலரும் மலர் போல தங்கள் கவிதையை பார்த்து நானும் கவிஞராக மலர்கிறேன்……. மகிழ்கிறேன்.
  மனிதர்கள் பிரிந்து சென்றனர்,
  நட்பு இல்லை என்றேன்.
  உறவுகள் பிரிந்து சென்றனர்,
  அன்பு இல்லை என்றேன்.
  ஆனால்….
  இன்று கண்ணீர் கூட பிரிந்து சென்றதே!
  ஏன் கண்ணீர் கூட பஞ்சமா இந்த கலியுலகிலே…..
  – உமா
  எஸ்.கே.பி., திருவண்ணாமலை.

Comments are closed.