தொட்டு விடும் தூரம் தான்…..

தொட்டு விடும் தூரம் தான்…..
மருத்துவ மேதைகளின் ஆராய்ச்சிப் பாதை ஒரு தொடர்
எத்தனை கேள்விகள் நம்மிடம் பதிலில்லாமல்? அதுவும் பல சமயங்களில் ஒரு கேள்விகூட இல்லாமல் வெறுமையாகவே எத்தனை நிகழ்வுகள்? தேடி சென்று பார்த்துக்கூட கிடைக்காத பதில்கள் எல்லாம் பல சமயம் எதிர்பாராத இடத்திலிருந்து கிடைப்பதுண்டு! அதை வாங்கிக் கொள்ளும் ஆர்வமும், பொறுமையும் இருந்தால் ஏதோ ஒரு சமயத்தில் நம் நினைவில் உள்ள கேள்விகளை எல்லாம் பதில்களால் நிரப்பி விட முடியும் என்றே நம்புகிறேன். அதுவே என்னை தொடர்ந்த வாசிப்பில் செலுத்திச் செல்கிறது.
அப்படி சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து என் பல நூறு கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. படிக்கும் போதே இப்படி ஒரு பரவசத்தை இது வரை மிக சில புத்தகமே கொடுத்து இருக்கிறது. இது ஒரு நான்பிக்க்ஷன் புத்தகமாக இருந்தாலும், உலகின் மிகச் சிறந்த கிரைம் புத்தகம் கொடுக்கும் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது. ஒரு அறிவியல் புத்தகத்தை இப்படி ஒரு பரவச நடையில் எழுத முடியும் என்று இது வரை நினைத்ததே இல்லை.
இந்த ஆண்டின் புலிட்சர் விருது பெற்ற சித்தார்த் முகர்ஜி என்னும் புதுமுக எழுத்தாளர், டாக்டர் எழுதிய தி எம்பரர் ஆப் ஆல் மெலடீஸ்புத்தகம்தான் அது. இதில் வரும் மெலடீஸ், இசை சார்ந்த வார்த்தை அல்ல. (Not Melodies, it is Maladies).
மருத்துவ உலகுக்கிற்கு இன்னமும் பிடிபடாத புதிராக, மனித குலத்தின் மிகக் கொடூரமான வியாதிகளில் ஒன்றான கேன்ஸர் பற்றிய வாழ்க்கை சரித்திரம். ஆம்! மனிதனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட கேன்ஸரின் வாழ்க்கை சரித்திரம்தான்ஆனால், அதற்கு கேன்சர் என்ற பெயர் வந்தது என்னவோ சென்ற நூற்றாண்டில்தான்.
இதை எழுதி உலகின் மிகச் சிறந்த விருதான புலிட்ஸர் விருது பெற்ற முகர்ஜியின் உழைப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் அளவேயில்லை. அதை படித்த நான் வெறுமனே, அதிலிருந்த சில பகுதிகளை மட்டும் என் மொழியில் உங்களுக்கு எழுதிப் பார்க்கிறேன். அதுவும் நான் வியந்த, என்னால் எழுத முடிந்த, ஒரு சில உள்ளடக்கத்தை மட்டும்.. இது ஒரு மொழி பெயர்ப்பல்ல.
வாசித்துக் கொண்டிருக்கும் போதே, அட! இது இப்படியா?, ! அதனால்தான் அப்படியா? என்றோ, அல்லது, தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களை பற்றி படிக்கும் போதோ, உங்கள் கண்கள் பனித்தால்?
அனைத்து பெருமையும் சித்தார்த் முகர்ஜிக்கே சேரும். முழு முதல் அனுபவத்திற்கு மூல புத்தகத்தை நேரடியாக வாங்கிப் படிக்கவும். நான் பகுதி, பகுதியாக அவ்வப்போது எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு இதே கேன்ஸர் நோயால் எனது அம்மா இறந்ததும் கூட, இந்த புத்தகத்தின் மீது எனக்கு கூடியுள்ள ஆர்வத்திற்கு காரணமாக இருக்கலாம். இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி, என் அம்மாவின் பிறந்த நாள்.
ஒரு மழை நாள் இரவில் கொடைக்கானல் விடுதியொன்றில், பாடம் செய்யப்பட்டு சுவற்றில் பொருத்தப் பட்டிருந்த அந்த வெந்நிறக் கழுகின் கண்கள் என் நினைவில் எப்போதும் உறைந்து நிற்பதைப் போல,
என்றும் பசுமையாக நிறைந்து நிற்கும் என் அம்மாவின் நினைவிற்கு……..

11 thoughts on “தொட்டு விடும் தூரம் தான்…..

 1. அன்புள்ள அண்ணா
  எனது அம்மாவின்
  நினைவூகளோடு எனது கண்களில் கண்ணீர்
  அழியுமா இந்த கேன்சர்

 2. The heart melting message, nothing can substitute the place of Amma but I pray and expect some thing should be done to prevent cancer. My Prayer Prolongs till the prevention aid comes

 3. Dear sir
  sory for this tpye of comment .
  if this is possible please write all these message in english because i am not able read these all things.
  I think this is too good. you have too much experience for all ideas as like a chairman

 4. Dear sir
  Lot of scientific information about cancer
  It is a heart melting message
  Not only a good Chairman you are a good writer

 5. Emotions are part of our life.But loosing the first great and wonderful teacher ie.,mother will be shaken for any.I share your thought process concerning the world has to come grips with the understanding of life process though looks simple but complicated in depth.A good human always share his thought process.I liked it very much.

 6. sir
  sharing of ideas experience thoughts with the others is a good human habits. i appreciate it. Your mother wishes you in all occasions of your life.

 7. great inspiring message!!
  motivating youngsters like us..
  thanks for sharing.
  good luck

 8. அன்பு கருணா
  கேன்சர் பற்றிய கட்டுரைகளை படித்தேன்
  தி எம்பரர் ஆப் ஆல் மெலடீஸ் புத்தகத்தை மிக நுண்மையாக உணர்ந்து எழுதி உள்ளீர்கள்
  அன்புடன்
  SRamakrishnan. Chennai

  1. முதல் முறையாக வலைப் பதிவு எழுதும் யாருக்கும் கமெண்ட் என்னும் இடத்தில் யாரேனும் ஓரிரு நல்ல வார்த்தைகள் எழுத விட்டால் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.
   அதிலும். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், போன்ற அற்புதமான எழுத்தாளர்கள் கமெண்ட் எழுதினால் எப்படி இருக்கும்? நிலை கொள்ளாது என்பார்களே! அப்படி இருக்கிறது.
   மிக்க நன்றி…

Comments are closed.