சுஜாதாவுடனான எனது முதல் சந்திப்பு இது.
எனது கல்லூரியின் முதல் வருடம் முடியும் நேரத்தில், பல்கலைகழகம் முழுவதும் ஏதோ ஒரு வேலை நிறுத்தத்தால் திடீர் விடுமுறை கிடைத்தது. எனக்கு ஒரு வருடம் முன்பு சேர்ந்தவர்களே இன்னமும் முதல் வருடத் தேர்வு எழுதாமல் இருந்த வினோதமானச் சூழல் அது. அதாவது, பல்கலைகழகத்தில், ஒரே நேரத்தில் இரண்டு பேட்ச் முதல் வருட மாணவர்கள். அதனால், ராக்கிங் எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வராமல் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது.
ஊருக்கு திரும்புவதற்காக பெங்களூர் வந்து விட்டு, வழக்கம் போல எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோட்டில் அலைந்து கொண்டிருந்தேன். அப்பபோதெல்லாம் இரவு ஏழு மணிக்கு மேல்தான் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் தமிழ்நாட்டுக்கு வண்டிகள் கிளம்பும்.
ஒரு சோம்பலான மதியப் பொழுதில் கப்பன் பார்க்கில் திரிந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த பியட் காரைப் பார்த்தேன். காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பக்கத்தில் இருப்பவரிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தது சாட்சாத் சுஜாதா! எனக்கு மூச்சு சற்று நேரம் நின்று விட்டது. உண்மையில் கையும் ஓடவில்லை! காலும் ஓடவில்லை! காருக்கு பின்னாலேயே தயங்கி நின்று கொண்டேயிருந்தேன்.
நீண்ட நேரம் நின்று கொண்டு காரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை ரியர்வியூ கண்ணாடி வழியே சுஜாதா கவனித்து விட்டார். தனது பக்க கதவைத் திறந்து கைகளால் என்னை அழைத்தார். அருகில் சென்ற என்னிடம், என்னப்பா வேண்டும்! இப்படி முறைத்து பார்த்துக் கொண்டேயிருக்கிறாயே? என்றார்.
இல்லை சார்! நான் ரசிகன். ஒரு ஆட்டோ கிராஃப் வேண்டும் என்றேன்.
சரி! பேப்பர், பேனா கொடு என்று கேட்ட பிறகுதான் எனக்கு உறைத்தது. என்னிடம் இரண்டுமே இல்லை! பின்னே! காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிற்றே!
இதோ வாங்கி வருகிறேன் சார் என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.
பெங்களூர் அவ்வளவாக பரிச்சயம் இல்லாத 1987ஆம் வருடம் அது. கப்பன் பார்க்கில் இருந்து தவறான வழியில் விதான் சவுதா வழியே வெளியே வந்து விட்டேன். அங்கு மருந்துக்கூட ஒரு கடை இருக்காது. பதட்டத்தில் ஓடிக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக சில கிலோமீட்டரில் கனரா வங்கி தலைமையகம் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் பேப்பர், பேனா கேட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் கப்பன் பார்க் நோக்கி வேகமெடுத்தேன்.
வேகமாக ஓடியதில் மூச்சு இறைத்ததை விட, இந்நேரம் அவர் அங்கிருந்து போய் விட்டிருப்பாரோ என்ற பதட்டம் அதிகமாக இருந்தது. என்னுடைய பையை வேறு காரின் பின்புறத்தின் அருகிலேயே போட்டு விட்டு வந்திருந்தேன். எத்தனை நேரம் ஓடினேன், எவ்வளவு தூரம் ஓடினேன் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது.
கப்பன் பார்க் உள்ளே நுழைந்து, தொலைவினில் அந்த பியட் கார் அங்கேயே நிற்பதை பார்த்த பின்புதான் கொஞ்சம் ஓட்டம் தளர்ந்தது. என் கையிலிருந்த பேப்பர் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. பையில் இருந்த ஒரு துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டு, மூச்சு சற்று ஆசுவாசப்பட்ட பின்பு மீண்டும் காரின் பின்னே காத்திருத்தல் ஆரம்பமாயிற்று.
கொஞ்ச நேரத்தில் என்னை கவனித்து மீண்டும் கையசைத்து கூப்பிட்டார். நான் வியர்வை பொங்க டிரைவர் இருக்கையின் அருகே சென்றேன். இம்முறை கையில் பேப்பரும், பேனாவும் இருந்தது. கொடு அதை! என்று என்னிடம் வாங்கிக் கொண்டு அருகில் இருப்பவரிடம் அந்த பேப்பரையும், பேனாவையும் கொடுத்தார்.
கமல்! ஒரு பையனுக்கு உன்னோட ஆட்டோகிராஃப் வேணுமாம் பாரு! ரொம்ப நேரம் வெயிட் பண்றான் என்று சொன்ன பின்புதான் நான் கவனித்தேன். அவர் அருகில் அமர்ந்து கொண்டிருந்தது நடிகர் கமலஹாசன்!
கமல் அந்த பேப்பரில் ஆட்டோகிராஃப் போடும் வேளையில், நான் சுஜாதாவிடம் சற்று சத்தமாகவே சொன்னேன். இல்லையில்லை! எனக்கு உங்கள் ஆட்டோகிராஃப்தான் வேண்டும் என்று!
சில நொடிகள் அங்கு ஒரு அமைதி. சுஜாதா லேசாக அதிர்ந்து விட்டார். கமல் உடனே சுதாரித்துக் கொண்டு, சார்! நான் சொன்னேன் இல்லையா? இப்போதெல்லாம் நீங்கள்தான் எங்களை விட பாப்புலர்! எனக் கூறிக் கொண்டே பேப்பரை சுஜாதாவிடமே தந்து விட்டார். சுஜாதா எதுவும் எழுதாமல் ரங்கராஜன்/ சுஜாதா என்று வெறுமனே கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார்.
அந்த ஆட்டோகிராஃபை சட்டையில் வைத்துக் கொண்டு, அன்று முழுதும், கப்பன் பார்க் முழுக்க கெத்தாக நடந்து கொண்டேயிருந்தேன். அப்போதே நான் கமல் ரசிகனும்தான். ஆனால், சுஜாதாவிற்கு முன்பு வேறு எந்த ஆளுமையும் என்னை அந்த அளவிற்கு பாதித்திருக்கவில்லை.
இருபது வருடம் கழித்து, நானும் நண்பர் பவா.செல்லதுரையும் ஒரு மாலைப் பொழுதில் சுஜாதாவை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போதெல்லாம், அவர் சென்னைக்கே வீடு மாற்றி வந்து விட்டிருந்தார். அவரை பார்க்கப் போகிறோம் என்றவுடன், எங்கள் நண்பர் திலகவதி ஐபிஎஸ், தானும் வருவதாக சொல்லி உடன் வந்தார்.
நீண்ட நேர சுவாரஸ்யப் பேச்சுக்கு பின், அவரிடன் நான் அந்த முதல் சந்திப்பைக் குறிப்பிட்டு சொன்னேன். சட்டென்று அங்கும் ஒரு அமைதி! பின் அது நீங்கதானா? என்றவர் அந்த சம்பவத்திற்கு பின்புதான் தானும் ஒரு பிரபலம் என்பதை நம்பவே ஆரம்பித்தேன் என்றார். கமல் இன்னமும் அதை நினைவில் வைத்திருக்கிறார் என்று ஒரு கூடுதல் தகவலும் கொடுத்தார்.
இன்ஜினியரிங் படிக்க பெங்களூருக்கு ஏன் வந்தீர்கள்? மார்க் குறைவா? என்றார். மார்க்கை சொன்னேன். தமிழ்நாட்டிலேயே கிடைத்திருக்குமே? பின் ஏன் பெங்களூர் என்றார்.
உங்களால்தான் சார்! என்றேன்.
வாட்!
ஆமாம் சார்! நீங்கள் பெங்களூரில் இருந்தீர்கள். அங்கே படித்தால் உங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமே? அதனால்தான் பிடிவாதம் பிடித்து அங்கே வந்தேன் என்றேன்.
நீங்கள் மேலும், மேலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறீர்கள்! என்றவர், பின்பு ஏன் என்னை பெங்களூர் வீட்டுக்கு வந்து பார்க்காமல், இந்த கப்பன் பார்க் விளையாட்டெல்லாம்? என்றார்.
நீங்கள்தானே சார், அப்போது எழுதியிருந்தீர்கள்! “உண்மையான ரசிகர்கள் கடிதம் போடுகிற அல்லது நேரில் வந்து பார்க்கிற ஜாதியில்லை” என்று? என்றேன்.
சட்டென அதிர்ச்சியுற்று, பின் நீண்ட நேரம் மவுனமாக இருந்து விட்டு, வீட்டினுள்ளே திரும்பி, சுஜாதா! இங்கே வா! இன்னுமொரு சுவாரஸ்யமான ரசிகன் எனக்கு என்று அவரின் மனைவியை அழைத்தார்.
———————————————————————————————————-
(கட்டுரைக்கு அவசியமற்ற ஒரு பின்குறிப்பு):
ஒவ்வொரு முறை பெங்களூரு செல்லும் போதும் நான் ஓடிச் சென்று வந்த வழியில் ஒரு முறை சென்று பார்ப்பேன். கப்பன் பார்க்குக்கும் அந்தப் பெட்டிக் கடைக்குமான தூரம் இன்னமும் அதேதான்.
ஆனால், இப்போது நான் செல்வது என்னுடைய லெக்சஸ் காரில்!
இருப்பினும், வியர்வை பொங்கி வர, மூச்சு வாங்க ஓடி வந்து, ஒர் பியட் காரின் பின்னே பதட்டத்துடன் காத்திருந்த அந்த ஒல்லி இளைஞனாகத்தான் ஓவ்வொரு முறையும், என்னை உணர்கிறேன்.
*எனது ஆதர்ச நாயகன் சுஜாதாவின் நினைவு தினம் இன்று.
சுஜாதாவின் ஆட்டோகிராஃப்

This is lovely. Good tribute to SUJATHA! |
// சரி! பேப்பர், பேனா கொடு என்று கேட்ட பிறகுதான் எனக்கு உறைத்தது. என்னிடம் இரண்டுமே இல்லை! பின்னே! காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிற்றே!// :)
// கமல் உடனே சுதாரித்துக் கொண்டு, சார்! நான் சொன்னேன் இல்லையா? இப்போதெல்லாம் நீங்கள்தான் எங்களை விட பாப்புலர்! எனக் கூறிக் கொண்டே பேப்பரை சுஜாதாவிடமே தந்து விட்டார். // That is Kamal!
UNMAITHAN….KAMAL IS A LEGEND
Oh my God! What an inspirational narration. I am so touched by your adoration for Sujatha. Hats off to You :-)
amas32
Wow … Very well written article sir. I met Sujatha Sir in BEL canteen once (just two minutes) Still remember how I was feeling at that moment … I was speechless…I am feeling the same now…didnt realise you were sucha big shot when i chatted up with you on TWTR :-) Pleasantly surprised – Thanx for sharing this article with me sir :-)
Thanks for Sharing !
Fanboyism at its best. :) பகிர்ந்தமைக்கு நன்றி. :)
எளிய இலக்கியதரமான நடை! புனைவைவிட உண்மையை எழுதும் பொழுதுதான் இப்படி சரளமாகவும் வாசகனை அருகிலமர்த்தவும் முடியும் !
Really a touching one… Good to see that u made Sujatha Sir realize that he is popular than actor :) A great loss to Tamil variety readers now…
When I was in TTK road at 1989, Sujatha Sir driving an Omni Maruthi with full of wetted hhair and driping water in neck. I am in close to his van riding in motor cycle. Grate moment that was !!!!
வாவ்! நம்பவே மாட்டீர்கள்.
“உண்மையான ரசிகர்கள் கடிதம் போடுகிற அல்லது நேரில் வந்து பார்க்கிற ஜாதியில்லை”
இதனால்தான் நான் அவரை சந்திக்க தயங்கிக்கொண்டே இருந்தேன்…இனி இன்னொரு உலகத்தில்தான் அவரைச் சந்திக்க வேண்டும்…
பகிர்ந்தற்கு நன்றி.
சிவா கிருஷ்ணமூர்த்தி
நீங்க எழுதியதை படிக்கும் போது ஏதோ நானே ஆட்டோகிராப் வாங்கியது போன்ற ஒரு உணர்வு. :)
Thank you for this write up . Very Interesting.
அருமையான பதிவு.
நல்ல பகிர்வு. நெகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளராக சுஜாதாவை எனக்கும் மிகவும் பிடிக்கும். ஒருவேளை பொறியாளர் என்பதனாலோ?
கருணா ஒரு வேண்டுகோள்! வேலைப்பளு அதிகம் இருந்தாலும் எழுதுவதை விட்டுவிடாதே!!!
இந்த ஊரில் இவ்வளவுஅழகான மொழிநடை கொண்ட ஒரு
எழுத்தாளர் உதயமாவது கண்டு பெருமை கொள்கிறேன்.
இலக்கியம் சார்ந்த வாழ்வும். எவ்வளவு தடைகள்வந்தாலும்
விடாப்பிடியாக நிற்கிற மனோபலமும் என்றுமே வாய்க்க
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களின் வாழ்பனுபவ பகிர்வு எங்கள் கண்முன்னே
ஓவியமாய் விரிகிறது…
விரைவில்உங்கள் படைப்புக ளை கோரி
ஆவலுற காத்துக்கிடக்கிறது.,தமிழ் இலக்கிய உலகு…
சுஜாதா புத்தகம் மட்டும் படியுங்கள். கமல் படம் மட்டும் பாருங்கள்.” இது நீங்கள் என் ஆட்டோகிராப் புத்தகத்தில் எழுதியது . நினைவு உள்ளதா?
I remember that Siva! What a surprise? Such a long time.
Call me.
இதை விட எழுத்தாளனுக்கு ஒரு போதையை, அகந்தையை எந்த ஒரு நல்ல வாசகனும் கொடுத்திருக்க முடியாது – இது ஒரு நல்ல எழுத்தாளனுக்கு மிக மிகத் தேவையான ஒன்றும் கூட! கல்லா நிரம்பவில்லை ஒரு ஓரம் மனது சொல்லும் போதெல்லாம், இது போன்ற நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கொண்டு இன்னும் உத்வேகமாய் எழுதுவான். நல்ல பதிவு – நன்றி :)
Sir your answer is also awesome. Are you a writer?
நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு அருமையான நடையில் பத்தி வாசிக்கிறேன். இன்று தான் இந்த பக்கம் கண்ணில் பட்டது. அருமையாக எழுதுகிறீர்கள்..நீங்கள் யார் என்று எல்லாம் எனக்கு தெரியாது..ஆனால் இந்த எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கிறது…வெளியே வந்து இதழ்களில் கொஞ்சம் எழுதுங்கள்.பாராட்டுகள்.
Thank you Pradeep.
I am just a small time writer and that too only in my website.
நான் நினைத்ததை நீங்கள் கூறியுள்ளீர்கள்
your answer is also awesome. Are you a writer?
கலக்கல்!!
அவர் எந்த கல்லூரி விழாக்களிலும் கலந்துக்கொண்டமாதிரித் தெரியல (அண்ணா பல்கலை தவிர). உங்கள் கல்லூரிக்கு இன்வைட் பண்ணிருக்கீங்களா?
Not Yet!
அருமையான அனுபவம் கருணா! எந்த நடிகருக்கும் இது போன்ற அனுபவம் கிடைத்திருக்காது :)))
Great experience sir! & also nice article about Sujatha sir.
அட்டகாசமான ரைட்டப்! அதுவும் காரில் கூட அமர்ந்திருந்தது கமல் என்பதை போகிற போக்கில் சொன்னவிதம் – டாப்.
/நீங்கள்தானே சார், அப்போது எழுதியிருந்தீர்கள்! “உண்மையான ரசிகர்கள் கடிதம் போடுகிற அல்லது நேரில் வந்து பார்க்கிற ஜாதியில்லை” என்று? /
நான் அவரைப் பார்க்காததற்குக் காரணமும் இதே. என் வலையில் எப்போதோ இதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
Amazing……ippadium oru rasigaraa ……excellent
கருணா,
அனுபவங்களை எழுதும்போது பிரமாதமான நடை வந்துவிடுகிறது , (ஜப்பான் ரயில்,இது,பாரதிராஜா)
தமிழில் எழுத்தாளனுக்கு தரப்பட்ட மிக அதிக அங்கீகாரம் , நன்றி.
//இருப்பினும், வியர்வை பொங்கி வர, மூச்சு வாங்க ஓடி வந்து, ஒர் பியட் காரின் பின்னே பதட்டத்துடன் காத்திருந்த அந்த ஒல்லி இளைஞனாகத்தான் ஓவ்வொரு முறையும், என்னை உணர்கிறேன்.//
உண்மைதான் , எங்கே என்னவாக ஆனாலும் மனம் உருகி சிறுவனாக நிற்பது பிடித்த ஆளுமைக்கு முன்புதான் .
குடுத்து வைத்த மனுஷன்யா நீ!
//பதட்டத்தில் ஓடிக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக சில கிலோமீட்டரில் …
…. எத்தனை நேரம் ஓடினேன், எவ்வளவு தூரம் ஓடினேன் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது.//
மிகையுணர்ச்சிகளின் பீதாம்பரமான ஜெயமோகனின் (நன்றி எம்டிஎம்) சீடர் என்று உங்களை நிலை நிறுத்தி விட்டீர்கள்!
அதை தவிர்த்து படித்தால் இது ஒரு நல்ல கட்டுரை என்று ஒத்துகொள்ளத்தான் வேண்டும். நன்றி!
நண்பரே,
ஜெயமோகனின் சீடராக வேண்டுமெனில், நானே அவரிடம் சென்று சேர்ந்து கொள்கிறேன்! நீங்கள் சேர்த்து விடாதீர்கள் ப்ளீஸ்!
No Politics with me Please!
உங்களின் கருத்துக்கும், நேரத்துக்கும் நன்றி!
(அப்புறம் அந்த எம்டிஎம் என்பது யாரு? நிஜமாகவே தெரியாது!)
படிக்கும்போது உங்களை நானாகவே
நினைத்துக்கொண்டேன். நானும் அவரோடு
நின்று படமெல்லாம் எடுத்துக்கொண்டுள்ளேன் .
அவருடைய தாக்கத்தில் அவருடைய கதை மாந்தரின்
பெயரையே என் மகளுக்கும் வைத்து மகிழ்ந்திருக்கிறேன்.
நன்றி. படித்த போது அவரை பார்த்ததாகவே உணர்ந்தேன்.
தூள் சார் :)
கலைஞர், சுஜாதா, கமல்னு நம்மோட சமகாலம் எவ்ளோ சுவாரஸ்யமா இருக்கு…
ரொம்ப சரி! அடுத்த ஜெனரேஷன் மிஸ் பண்ண ஐட்டங்கள் என்று தனியாக ஒரு கட்டுரையே எழுதிடலாம்! பொறாமையில வெந்துடுவாங்க!
ஆனா! நாம மிஸ் பண்ணுறதும் அதில ஒண்ணு இருக்கு! சஸ்பென்ஸ்! நேரில் சொல்றேன் யுவா!
Attagasam… Kalakkall.. aa posting..
மிகவும் யதார்த்தமான அதே நேரம் உணர்சிகரமான ஆனால் நகைச்சுவை தன்மையும் கூடி அழகாக எழுதியுள்ளீர்கள். ஜெயமோகன் தளத்தில் இருந்து இங்கு வந்தேன்.
அப்படியே என்னை பெங்களுரின் அந்த நாட்களுக்கு அந்த இடத்திற்கு கொண்டு விட்டது…மீண்டும் மீண்டும் திரும்பி வந்து படிக்க விரும்பும் ஒரு பதிவு இது….
நல்ல எழுத்து
அன்புடன்
ஸ்ரீதர்
Aam SUJATHA atharkku thaguthiyanavarthan
it is very interesting to read but you can extend ur writings why the duo personalities influenced you?
thanks to Jayamohan linked you.
இருபது வருடம் கழித்து நானும் பவாவும் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.
நான் இப்பொழுது பவாவும், சுஜாதாவும் எந்த இடத்தில் ஒன்று சேர்கிறார்கள் என்று நினைத்து கொள்கிறேன்.
சிந்தனை வழியா! அல்லது ஆளுமையின் வழியா!
சரி அத விடுங்க. சுஜாதாவை நினைவு கூர்ந்ததுக்கு நன்றி.
அருமையான பதிவு நண்பரே.. ஒவ்வொரு நடையிலும் தெரிகிறது வாத்தியார் மேல் இருக்கும் ரசனை..
அருமையான எழுத்துநடை கலக்கிட்டிங்க சார் :-)
Thanks for sharing a wonderful experience!
அருமை. தொடர்ந்து எழுதுங்கள் :-)
அடுத்த ஜெனரேஷன் மிஸ் பன்ன ஐட்டங்கள் —
நல்ல தலைப்பு. எழுத ஆரம்பிக்கலாமே.
I remember you telling this emotional episode few years back. we all grew up reading our Sujatha’s writings and you grew much larger my friend! this narration is an emotional ride and i am still flooting!!
இது சுஜாதா அவர்களுக்கு அருமையான ட்ரிப்யூட் சார். நல்ல பதிவு :)
no words to express i just melt off on our words……i am not great reader ….but this one may be a good one for ever in my timeline.
This has got all ingrediants for a good small story.Very interesting.
Excellant
Read it several times….so moving..my admiration of Sujatha has gone up several notches more….
ரொம்ப அருமையாக நிகழ்வுகளை விளக்கி உள்ளீர்கள்.அதில் உச்ச கட்டம் இதுதான்
“சட்டென அதிர்ச்சியுற்று, பின் நீண்ட நேரம் மவுனமாக இருந்து விட்டு, வீட்டினுள்ளே திரும்பி, சுஜாதா! இங்கே வா! இன்னுமொரு சுவாரஸ்யமான ரசிகன் எனக்கு என்று அவரின் மனைவியை அழைத்தார்”
தனக்கு எப்பேர்பட்ட வாசகன் கிடைத்திருக்கிறான் என்று பெருமித உணர்வுடன் அவரின் மனைவியை அழைப்பது தான்.உண்மையில் கொடுத்து வைத்தவர் தான் நீங்கள்.
அருமையான பதிவு. நான் புதிதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை, எனினும் ஒரு நல்ல பதிவை பின்னூட்டமிடாமல் கடந்து செல்ல மனம் வரவில்லை.
வாழ்த்துக்கள் :-)
நெகிழ்ந்தேன்!
Thanks for sharing this!!! Hope you still keep that precious autograph of Sujatha…
கருணா ,
நீங்கள் எழுதியதை (இந்த லிங்க்)
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையத்தில் இருந்து பெற்றேன்
கருணா உங்களுக்கு வாழ்த்துக்கள் ,
சுஜாதா அவர்களின் பல லட்சம் சுவாரஸ்ய ரசிகர்களில் நீங்களும் ஒருவர் , என்பதை சாரே சொல்லிட்டார் , மகிழ்ச்சி நானே நம்ப சார் கிட்டே போய் ஆட்டோகிராப் வாங்கியதாக உணர்தேன் ,
எழுத்தோடு எப்போதும் நம்மிடம் இருந்து கொண்டே இருப்பார், சுஜாதா அவர்கள் நினைவு தினம் அன்று நல்ல பகிர்வு, சுஜாதாவின் நல்ல வாசகர்களுக்கு
உங்களைப்போலவே நானும் ஒரு எதிர்பாராத சந்திப்பில் 1980ல் திரு. சுஜாதாவை சந்தித்தேன். ஒரு அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த பரவசத்தில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க கூட மறந்துவிட்டேன். எப்பேர் பட்ட மனிதர்.? அதன் பிறகு சென்னையில் அவர் வந்த பிறகு சென்று பார்க்க தோன்றினாலும், அவர் சொன்ன வார்த்தைகளான ” ஒரு நல்ல ரசிகன் வீடு தேடியெல்லாம் வரமாட்டான்.” என்ற வாசகம் கட்டி போட்டது. உமக்கும் எனக்கும் ஒரு சிறு வித்தாயசம். இன்று என்னிடம் லக்செஸ் இல்லை. ..:)
லெக்ஸஸ் காரெல்லாம் ஒரு பெரிய வித்தியசமாகக் கருதப்படாது சார்!
சுஜாதா ரசிகர்கள் என்னும் பெருமையின் முன்.
சுஜாதாவை தற்செயலாக உங்களை போல நேரில் சந்திக்க நேரிட்டால் பேச வாய் எழாமல் பார்த்துக்கொண்டே நின்று இருப்பேன்! அது போதாமல் கமல் வேறு சீனில
மிக்க நன்றி !!!
In writing section Sujatha is great as well as in acting is Kamal. Sujatha has explained his thoughts in a simplified words.
Very true! True fans never go to see or writ to the idols! “Nimisha,Nimisha” by Sujatha, piqued my interest in Computers! How could anyone write in such simple languahe the tch of voice recognition, which is so popular now, sooomsny years back. A Great writer!
சார் என்ன அற்புதமான அனுபவம் இது. கமலஹாசன் மற்றும் சுஜாதா இருவரின் வாழ்விலும் ஒரு மறக்கமுடியாத சம்பவமாக ஆக்கிவிட்டது, உங்களின் மறக்கமுடியாத இந்த சம்பவம். உங்கள் சரளமான நடை படிக்கவும் சுவையாக இருக்கிறது.
கண்ல நீர் sir.படிச்சவுடன்…..
அருமையான அழகான பதிவு,…. வாழ்க்கையில் சிலருக்கு சில தருணங்கள் மறக்கமுடியததாகவும், மாற்றத்தை உருவாக்குவதாகவும்அமைந்து விடுகிறது, அது மிக சிலராலே பதிவு செய்யப்படுகிறது, அதையும் சகோதரர் கர்ணா மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றார்,….வாழ்த்துக்கள் சகோதரரே,….
சுஜாதாவிடம் என்ன ஒரு பாசம், என்ன வெறி, அடேயப்பா
மிக அரிதான பன் முக ஆளுமைதான் சுஜாதா
வாசகர்களின் இந்த அன்பு ஒன்று போதாதா அவருக்கு. வேறு என்ன
விருது வேண்டும் அவருக்கு
நானே ஓடிப்போய் வந்ததுபோல் படபடக்கிறது. இதோ.. வழியும் கண்ணீரின் துளிகள் சுஜாதாவிற்கு சமர்ப்பணம்.. உங்கள் வழியே…. சேர்த்துவிடுங்கள்.
Sir
Today i have read the hindu tamil edition beautiful.
mr.sujatha already did a very good job to this society
he conveyed to the people how to live in this world.
You did a correct thing against mr.kamal.i am also a fan of mr.kamal
mr.rajini and mr.kamal did nothing for the youths .
At that time kamal rajini and our writer sujatha are equally respectful persons.
but except sujatha ,kamal and rajini begind the money for their investments.
let us start writer sujathas fans club.
ramachandran
Simply superb…
Sir
One more subject
if both kamal and rajini joined for youths no one can beat
e
our sujatha interested but both of them having an personal reasons they have not accepted
our youths are now at tasmac.
ramachandran
Please dont say only youths are interested I am also a great fan of Mr. Sujatha I am only 72 yrs but I always enjoy from ku pa ra pudumaipithan k alki to sujatha and others tooMr. Karuna it was so touching I can very well imagin a panting youngster anxiously waiting for sujatha to give the autograph . Thanks for sharing
அருமையான பதிவு அற்புதமான நெகிழ்வு வாழ்க வளமுடன் ஐயன் ்்்்
Dear SKPK, after a long time I could feel fantastic about your writing. It’s so interesting and amazing. Here it’s meaning is that your writing. The way of presentation and so on.
I hope I have got one junior most Sujatha to read and spend my time.
Keep writing bro.
It’s ment that your writing.
Thank you so much.