இந்த ஆண்டின் சிறந்த மனிதன்.


2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று.
இந்த 2012ஆம் ஆண்டில் என்னை மிகவும் பாதித்த ஒரு மனிதனைப் பற்றி மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன்.
அது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போரட்டக் குழுவின் தலைவர் திரு.சுப.உதயகுமார்தான்.
உதயகுமாரும், அவரது மக்களும் எதிர்த்து போராடுவது அரசின் ஏதோ ஒரு திட்டத்தை மட்டுமல்ல.
உதயகுமார் எதிர்த்து நிற்பது,
உலகின் மிக சக்தி வாய்ந்த இந்திய அரசாங்கத்தை!
அது தனது சகல சக்தியையும் பிரயோகித்து பரப்பி விடும் கடும் அவதூறுகளை!
தனது சொந்த மக்கள் மீதே காட்டுமிராண்டித் தனமாக தடியடி நடத்தும் காவல்துறையினரை!
திட்டத்தை ஆதரிக்கும் சக்தி வாய்ந்த செய்தி, ஊடகத் துறை சர்வாதிகாரிகளை!
வெளிநாட்டு வியாபார சக்திகளை!
எல்லாவற்றுக்கும் மேலாக, கடுமையான மின் வெட்டினால் தினமும் அல்லாடி கொண்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களின் வசவுகளை!
தலை சுற்றுகிறது!
நான் அறிந்து, மகாத்மா காந்தி கூட இத்தனை அவதூறுகளை, எதிர்ப்புகளை சந்தித்திருக்க மாட்டார். மேன்மை தாங்கிய அப்போதைய ப்ரிட்டிஷ் அரசு, இப்போதைய இந்திய அரசை விட எல்லா விதத்திலும் மேன்மையாகவே நடந்து கொண்டது என்பது வரலாறு.
தான் மனப்பூர்வமாக நம்பும் ஒரு விஷயத்துக்கு, இப்படி தனது உயிரையும் பணயம் வைத்து போராடும் சகோதரர் உதயகுமாரை இங்கிருந்தபடியே கட்டித் தழுவிக் கொள்கிறேன்.
எனது கனவு தேசத்துக்கான வித்து, உதயகுமார் போன்ற சுயநலமற்ற போராளிகளின் வழியேதான் இந்த தேசமெங்கும் தூவப்படும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.
வாழ்க்கையைப் பற்றிய எனது புரிதலை ஒரு முகமாக்கியது உதயகுமாரின் போராட்ட குணமே!
அந்த வகையில் இந்த வருடத்தின் மிகச் சிறந்த மனிதராக திரு.உதயகுமாரையே எனது மனம் நினைக்கிறது.
அவருக்கும், அவரது குழுவினருக்கும் எனது மனப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துகள்!
ஒரு அணுமின் நிலையங்களின் தீவிர ஆதரவாளனாக, (ஆம்! இன்னமும் ஆதரவாளனாகவே) இருக்கும் எனது வாழ்த்தும்,அவரது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என்று நம்புகிறேன்.

6 thoughts on “இந்த ஆண்டின் சிறந்த மனிதன்.

 1. நீங்கள் இரண்டு கல்லுரிகள் நடத்திவருகின்றிர்கள்.ஆனால் இன்று ஒரு நாலைக்கு குறைந்தது 10 மணிநேரம் UPS முலம் இயங்குகிறது உன்கள் கல்லுரி. இதற்க்கு காரணம் யார் எனறு நினைத்துப்பாருங்கள் அப்பேழது உன்கலுக்கு புரியும்.இந்த மின்வெட்டால் உன்கள் துறைக்கு எந்த பாதிப்புகள் இல்லை.ஆனால் மற்ற தெழில்த்துறைகலுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? நீங்கள் தி.மலை அதனால் உன்கலுக்கு இந்த பாதிப்பு தெரியவில்லை. கேவை.திருப்புர் பகுதிகளில் கேலுங்கள் அப்பேழுது தெரியும். இவரின் பேராட்டத்தை குறைசெல்லவில்லை இந்த திட்டத்தை ஆரம்பிக்கும் பேது இதே மக்கள் இருந்தார்கள் அப்பேழுதுயெல்லாம் பேராடமல் தர்ப்பெழுது பேராடுவது வீண்செயல். இவர்கள் பணம் வாங்கிக்கெண்டு செய்தார்கலா. அல்லது வெளிநாட்டிநர் துண்டுதலின் பேரில் செய்கிரார்கள் என்று தெரியவில்லை. ஒரு திட்டம் கெண்டுவந்தால் அதை எதிர்ப்பவர்கலும்,ஆதிரப்வர்கலும் இருக்கத்தான் செய்கிரார்கள். sir நான் ஏதேனும் தவறாக கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  1. திரு.வனத்தான்,
   உங்கள் வேதனை எனக்கு முழுமையாக புரிகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு கூட டீஸல் ஜெனரேட்டர் ஓட்டுவதற்கு மாதம் பல லட்சங்கள் செலவாகிறது. அது அரசின் தவறு. திட்டமிடலின் தவறு.
   எல்லா மின் திட்டங்களுக்கும், அணுமின் திட்டங்கள் உட்பட அனைத்து புதிய திட்டங்களுக்கும் நான் ஆதரவாளனே. அது பற்றி ஒரு நீண்ட பதிவையும் எனது வலைதளத்தில் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள்.
   இவ்வாண்டின் சிறந்த மனிதனாக நான் உதயகுமாரை நினைப்பதற்கு வேறு காரணம். அது, சுயநலமற்ற போராளிக்கானது. எதையும் இழக்கத் துணிந்த மனிதனின் தைரியத்துக்கானது.
   சிலர் அவதூறு செய்வதைப் போல, உதயகுமாரின் நேர்மையைப் பற்றி எனக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை.
   உங்கள் பதிலுக்கு நன்றி. (சற்று மெனக்கெட்டால் தப்பில்லாமல் தமிழை நீங்கள் எழுத முடியும்! முயுற்சி செய்யுங்களேன்.)
   புத்தாண்டு வாழ்த்துகள்.

 2. தான் மனப்பூர்வமாக நம்பும் ஒரு விஷயத்துக்கு, இப்படி தனது உயிரையும் பணயம் வைத்து போராடும் சகோதரர் உதயகுமாரை இங்கிருந்தபடியே கட்டித் தழுவிக் கொள்கிறேன் nanum than

 3. மாற்றுக்கருத்து உள்ளவர்களையும் புரிந்து கொண்டு, பாராட்டும் பண்பு அனைவருக்கும் வராது. இந்தப் பதிவுக்கு வலு சேர்க்கும் விஷயமே அது தான் … ஹேட்ஸ் ஆஃப் !!! – சுதா

  1. அதை முப்படைகள், உளவு துறை, சிபிஐ. ரா, பொருளாதார குற்றப் பிரிவு போன்ற அதிகாரம் கொண்ட அமைப்புகளை தனது கையில் வைத்திருக்கும்
   மத்திய அரசு கண்டு பிடித்து சொல்ல வேண்டுடியதுதானே?

Comments are closed.